
Muthaarame Un Oodal Ennavo
உன் ஊடல் என்னவோ ...
முத்தாரமே
உன் ஊடல் என்னவோ
சொல்லாமல்
தள்ளாடும்
உன் உள்ளம் என்னவோ
முத்தாரமே
உன் ஊடல் என்னவோ
சொல்லாமல்
தள்ளாடும்
உன் உள்ளம் என்னவோ
. அத்தானிடம்
என் கோபம் செல்லுமோ
அன்றாடம் கொண்டாடும்
நம் சொந்தம் கொஞ்சமோ
அத்தானிடம்
என் கோபம் செல்லுமோ
அன்றாடம் கொண்டாடும்
நம் சொந்தம் கொஞ்சமோ
. முத்தாரமே
உன் ஊடல் என்னவோ ...
. ராமன் நெஞ்சிலே
சீதை வண்ணமே
வாழும் என்று
என் மன்னனோடு நான்
சொல்ல வேண்டுமோ
இங்கே இன்று
. கணவன் மனதிலே
களங்கம் கண்டதோ
சீதை நெஞ்சம்
கணவன் மனதிலே
களங்கம் கண்டதோ
சீதை நெஞ்சம்
என் காதல் உறவிலே
மாற்றம் காண்பதோ
பேதை நெஞ்சம்
. பெண்ணல்லவா
மனம் போராடுது
. நான் சொல்லியும்
ஏன் தடுமாறுது
. அத்தானிடம்
என் கோபம் செல்லுமோ
அன்றாடம் கொண்டாடும்
நம் சொந்தம் கொஞ்சமோ ...
. முத்தாரமே
உன் ஊடல் என்னவோ ...
. தேக்கி வைத்த அணை
தாண்டிப் போகுமோ
ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ
பொங்குமல்லவா
கண்ணீர் வெள்ளம்
. ஓய்வில்லாத படி
ஓடுகின்ற நதி
கடலில் சேரும்
ஓய்வில்லாத படி
ஓடுகின்ற நதி
கடலில் சேரும்
காதல் என்னும் நதி
பாதை மாறினும்
உன்னைச் சேரும்
. உனக்காகவே
நான் உயிர் வாழ்கிறேன்
. மனக் கண்ணிலும்
நான் உனைப் பார்க்கிறேன்
முத்தாரமே
உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும்
உன் உள்ளம் என்னவோ
. அத்தானிடம்
என் கோபம் செல்லுமோ
அன்றாடம் கொண்டாடும்
நம் சொந்தம் கொஞ்சமோ
. முத்தாரமே