உன்ன கண்ட நாள் முதலா
வச்ச பொட்டும் கருப்புதான்
ரெட்டை ஜாட பின்னலுல
கட்டும் ரிப்பன் கருப்புதான்
பூக்கடையில் தேடினேன்
பூவில் இல்லை கருப்புதான்
அன்று முதல் எனக்குதான்
பூக்கள் மீது வெறுப்புதான்
பாவாடை கட்டி கட்டி
பதிஞ்சு தடம் கருப்புதான்
முத்தம் கேட்டு காத்திருக்கும்
அந்த இடம் உனக்குத்தான்
உன்ன பொத்தி வச்சிருக்கும்.....
உன்ன பொத்தி வச்சிருக்கும்
நெஞ்சு குழி கருப்புதான்
ஊரறிய பெத்துக்கணும்
புள்ள பத்து கருப்புதான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு
நம்மூரு சூப்பர் ஸ்டாரு
ரஜினிகாந்து கருப்புதான்
அழகு கருப்புதான்
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் தொளசண்ட் வாட்ஸ் பவரு
கருப்புதான் என்னக்கு புடிச்ச கலரு
சாமி கருப்புதான்
சாமி சிலையும் கருப்புதான்
யான கருப்புதான்
கூவும் குயிலும் கருப்புதான்
என்ன ஆச பட்டு கொஞ்சும் போது
குத்துற மீசை கருப்புதான்
அசத்தும் கருப்புதான்