பூவரசம் பூவுக்குள்ளே இருப்பதென்ன சொல்லு
பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு
பசிக்குதம்மா நில்லு
பூவெடுத்து தேனெடுத்து
எதுக்கு இங்கே வரணும்
பரிதவிச்சு பசிச்சு நின்னா
பந்தியப் போட்டு தரணும்
ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி
கீச்சு கீச்சு பேசுதையா
மனச கொஞ்சம் துருவி
பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி பூசவா ஒஹ்...
தேனே அடையாளம் போடவா
மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதய்யா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதய்யா மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
நானே மருதாணி பூசவா ஒஹ்....
நீயே அடையாளம் போடவா
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதய்யா மீனே