தீபோல் தேன்போல்
சலனமேதான்
மதியினும்
நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டு சென்றாயே
நினைவை வெட்டி சென்றாயே
இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா
உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா
மருவும் மனதின்
ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா
சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும்
என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா
ரணமும் தேன் அல்லவா
ரணமும், தேன் அல்லவா