menu-iconlogo
huatong
huatong
avatar

Chillena - From "Raja Rani"

Clinton Cerejo/Alphonse/alkahuatong
smoken62huatong
Letras
Grabaciones
சில்லென ஒரு மழை துளி

என்னை நனைக்குதே பெண்ணே

சிறகுகள் யார் கொடுத்தது

நெஞ்சம் பறக்குதே முன்னே

உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே

உன் கனவுகளாய் நான் மாறினேன் பெண்ணே

அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே

சிரிச்சி கவுத்தாத

என் கண்ணு குட்டியே கம்மாக் கரையில் நீ

கப்பல் ஒட்டாதே

கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா

கைபோட்டு போலாமா

கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு

என்று என் விழிகள் அய்யய்யோ என்கிறது

கோடை கால மழை வந்து போன பின்னும்

சாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட

என்னை தாக்கும் புயலே

இரவோடு காயும் வெயிலே

ஹோ .ஹே . உன்னாலே .

நூலில்லா காத்தாடி ஆனேனே

அடி பெண்ணே அடி கண்ணே

நான் விழுந்தால்

உன் பாதம் சேர்வேனே

உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே

உன் கனவுகளாய் நான் மாறினேன் பெண்ணே

சில்லென ஒரு மழை துளி

என்னை நனைக்குதே பெண்ணே

சிறகுகள் யார் கொடுத்தது

நெஞ்சம் பறக்குதே முன்னே

காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி

மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா

கோபங்கொள்கையிலும் கிறங்க வைக்குதடி

மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா

ஆளை கொள்ளும் அழகே நிழல் கூட அழகின் கதவே

ஒரு நாளும் குறையாத

புது போதை கண்ணோரம் தந்தாயே

அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய்

நெஞ்சோரம் வந்தாயே

அடி இடம் வலமாய்

நான் ஆடினேன் பெண்ணே

இடி மழையாய் எனைத் தாக்கினாய் முன்னே

Más De Clinton Cerejo/Alphonse/alka

Ver todologo