menu-iconlogo
huatong
huatong
hariniunni-krishnan-thirumba-thirumba-cover-image

Thirumba Thirumba

Harini/Unni Krishnanhuatong
shybaby615huatong
Letras
Grabaciones
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல் சொல்லும்

கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு

திரும்ப திரும்ப இதயம் கேட்டு

திரும்ப திரும்ப உயிரை கொல்லும்

நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம்

தெரிவதில்லை வாடினேன்

இமைகள் ரெண்டும் நீங்கிடும்

மருத்துவங்கள் தேடினேன்

உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆ…

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல் சொல்லும்

கனவு காதலா...

உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ

காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ

வாங்கி கொண்ட சேலைதான் வானவில் ஆனதோ

முத்தம் வைத்து கொல்வதை

வானம் என்னை எண்ணுதோ

எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ

உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ

காதலித்து பார்க்கையில்

இதயம் நின்று போகுமே

இதயம் நின்று போயிடும் ரத்த ஓட்டம் ஓடுமே

பிறப்பு போல இறப்பு போல

ஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆ…

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல் சொல்லும்

கனவு காதலா...

கவிஞன் மனச போல நீ துருவி

துருவி பார்க்கிறாய்

கிராம மண்ணின் தென்றலாய்

உரசி உரசி கேட்கிறாய்

இந்த மென்மை ஆண்மை உன்னை எண்ணி ஈர்க்குது

மேஜை விளக்கு போல நீ

தலை குனிந்து போகிறாய்

ஓடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்

இந்த தன்மை தானடி என்னை உன்னை கோர்த்தது

இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது

உன்னை பார்க்கும்போதுதான்

நூறு மடங்கு கூடுது

வெட்கம் பாதி சொர்க்கம் பாதி

மாறி மாறி வந்து போனது ஆ…

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல்

சொல்லும் கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு

திரும்ப திரும்ப இதயம் கேட்டு

திரும்ப திரும்ப உயிரை

கொல்லும் நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம்

தெரிவதில்லை வாடினேன்

இமைகள் ரெண்டும் நீங்கிடும்

மருத்துவங்கள் தேடினேன்

உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆ…

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப காதல்

சொல்லும் கனவு காதலா

Más De Harini/Unni Krishnan

Ver todologo