menu-iconlogo
huatong
huatong
avatar

Oorellam Saamiyaga

Jayachandran/S Janakihuatong
◦•●◉✿🅺🆁🅸🆂🅷~🅼🅰🅽🅸✿◉●•◦huatong
Letras
Grabaciones
ஆ:ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை...

ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ...

ஆ:ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை...

ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ...

வண்ணக்கிளியே...

சொல்லு கிளியே...

ஓ..ஓ..வண்ணக்கிளியே...

சொல்லு கிளியே...

பெ:ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை...

ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே...

வண்ணக்கிளியே...

சொல்லு கிளியே...

ஓ...ஓ..வண்ணக்கிளியே...

சொல்லு கிளியே...

ஆ:ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை...

ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ...

ஆ:தெய்வம் வரும் மனித உருவிலே

படித்ததுண்டு ஏட்டிலே...

தெய்வம் என்று தெரிந்த போதிலே

பூட்டலாமோ வீட்டிலே...

பூஜை செய்யும் தேவி உன் மேல்

ஆசை வைத்தால் பாவம்...

நானும் உன்னை தாரம் என்று

ஏற்றுக்கொண்டால் துரோகம்...

ஜீவன் உள்ள வான் நிலாவை

நானும் சேரக் கூடுமோ...

பாவம் இந்த பாவம் என்று

காலம் என்னை தூற்றுமோ...

பெ:ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை...

ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே...

வண்ணக்கிளியே...

சொல்லு கிளியே...

ஓ...ஓ..வண்ணக்கிளியே...

சொல்லு கிளியே...

பெ:தெய்வம் கண நேரம் என் மேல்

வந்து பேசி போகுது...

வந்து பேசி போவதால் நான்

தெய்வம் ஆக கூடுமோ...

ஊரில் உள்ள பேருக்கெல்லாம்

வாக்கு சொல்லும் பாவை...

உன்னிடத்தில் கேட்டு நின்றாள்

வார்த்தை ஒன்று தேவை...

என்னை தெய்வம் என்றால் எந்தன்

வாக்கும் தெய்வ வாக்குதான்...

தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு

வாழ்க்கை ஒன்றை நீ கொடு...

( இசை )

ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ...

ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ...

ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ...

ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ...

ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ...

ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ...

ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ...

ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆ...

Más De Jayachandran/S Janaki

Ver todologo
Oorellam Saamiyaga de Jayachandran/S Janaki - Letras y Covers