menu-iconlogo
logo

Eatho Oru Paatu

logo
Letras
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே

உன் ஞாபகம் சிறகடிக்கும்

நான் சுவாசிக்கும் மூச்சினிலே

உன் ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும்

ஞாபகங்கள் குடையாகும்

ஞாபகங்கள் தீ மூட்டும்

ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே

கேட்கும் இசையெல்லாம்

நீ பேசும் ஞாபகமே

பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால்

முகப்பரு ஞாபகமே

அதிர்ஷடம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்

அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே

வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே

தொட்டால் சிணுங்கி பார்த்தால்

உந்தன் வெட்கம் ஞாபகமே

அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்

மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே

உன் ஞாபகம் சிறகடிக்கும்

நான் சுவாசிக்கும் மூச்சினிலே

உன் ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும்

ஞாபகங்கள் குடையாகும்

ஞாபகங்கள் தீ மூட்டும்

ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்