ஆஹாயம் பூமி எல்லாம்
இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே
உன்னை தந்தானம்மா
கண்ணே உன்மேல் மேகம் தான்
பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளித் தாவும் மான் குட்டி
சொல்லிச் சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு
பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பு
மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி
ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இந்த வெள்ளி தாரகை...
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்னக் கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி