இசையமைப்பாளர் திரு.சௌந்திரயன்
அவர்களுக்கு நன்றி
மனதை வருடும் இப்பாடலை பாடிய
Dr.K.J.யேசுதாஸ் அவர்களுக்கு நன்றி
சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம்
விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்
எந்தன் நெஞ்சில் காயமடி
சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம்
விம்மி வருந்துது
குமரி நீயும்
குழந்தையடி
மான் கொழுந்து தானே
இதயமடி
பொறந்த பாசம்
தவிக்குதடி
உன்ன பாக்க மனசு
துடிக்குதடி
என்ன நடந்ததால்
உந்தன் முகம் சிவந்தது
எந்த நினைவிலே
சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க
உனது வாழ்வில் கலக்கமேனடி...
சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம்
விம்மி வருந்துது
மனசுக்கேத்த
மாப்பிள்ளையை
உன் மனசு போல
மணமுடிப்பேன்
சீமந்தமும்
நடத்தி வெப்பேன்
உன் குழந்தைகளை
நான் சுமப்பேன்
பதினாறுகளும்
பெற்று நீ வாழணும்
அத பார்த்து நான்
தினம் தினம் மகிழணும்
நம்ம ஊரும் உறவும்
உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும்...
சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம்
விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்
எந்தன் நெஞ்சில் காயமடி
சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம்
விம்மி வருந்துது
InnisaiMazhai Presentation
( on 06th April 2020)