லா லா லா லாலா லாலா லா
லா லா லா லாலா லா லா லா
ல லா லா ல லா
லா லா லா
செல்ல கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை,
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை……
கன்றின் குரலும் கன்னி தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா…
கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும்
வார்த்தை அம்மா அம்மா…..
கன்றின் குரலும் கன்னி தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா…
கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும்
வார்த்தை அம்மா அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த
மனமே அம்மா அம்மா….
இன்ப கனவை அல்லி தரவே இறைவன்
என்னை தந்தானம்மா….
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை….
செல்ல கிளிகலாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்கலாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை,….
தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும்
அன்னை இல்லாதவன்,
தன்னை தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில்
உறக்கம் கொள்வானவன்…
தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும்
அன்னை இல்லாதவன்,
தன்னை தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில்
உறக்கம் கொள்வானவன்…
பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை
கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும்
வாழ்க்கை செய்வானவன்,
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை…..
செல்ல கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை…..
பாடல் பதிவேற்றம்
நன்றி