menu-iconlogo
logo

Aayiram Malargale Malarungal

logo
Letras
ஆயிரம் மலர்களே மலருங்கள்.....

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ

நெருங்கி வந்து சொல்லுங்கள்...

சொல்லுங்கள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்.....

வானிலே வெண்ணிலா

தேய்ந்து தேய்ந்து வளரலாம்

வானிலே வெண்ணிலா

தேய்ந்து தேய்ந்து வளரலாம்

மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ……

ராகங்கள் நூறு பாவங்கள் நூறு

என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ ..

ஆயிரம் மலர்களே மலருங்கள்...

கோடையில் மழை வரும்

வசந்தகாலம் மாறலாம்

கோடையில் மழை வரும்

வசந்தகாலம் மாறலாம்

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ

காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்

நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ ?

ஆயிரம் மலர்களே மலருங்கள்.....

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே

மலையின் மீது ரதி உலாவும் நேரமே

சாயாத குன்றும் காணாத நெஞ்சும்

தாலாட்டு பாடாமல் தாயாகுமோ....

இருவரும்:ஆயிரம் மலர்களே மலருங்கள்...

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ

நெருங்கி வந்து சொல்லுங்கள்...

சொல்லுங்கள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்.....