பெண் : ஊரைஎல்லாம் சுத்தி
வந்த ஒத்தக்கிளியே
இப்போ ஓரிடத்தில்
நின்றதென்ன சொல்லு கிளியே
ஆண் : சொந்த பந்தம்
யாரும் இன்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்போ
வந்ததென்ன வாசல் வழியே
பெண் : வேரு விட்ட ஆலங்கன்னு
வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையில
மெல்ல மெல்ல பூக்குது
ஆண் : பூ பூவா பூக்க வச்ச
மாமன் அவன் யாரு
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு
பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
பெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
பெண் : யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
ஆண் : வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு
பெண்குழு : பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு