ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 
உன் கையில் 
என்னைக் கொடுத்தேன் 
நீதானே புன்னகை மன்னன் 
உன் ராணி நானே 
பண்பாடும் பாடகன் நீயே 
உன் ராகம் நானே 
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 
 சில காலமாய் நானும் 
சிறை வாழ்கிறேன் 
உனைப் பார்த்தால் தானே 
உயிர் வாழ்கிறேன் 
தூக்கம் விழிக்கிறேன் 
பூக்கள் வளர்க்கிறேன் 
சில பூக்கள் தானே 
மலர்கின்றது 
பல பூக்கள் ஏனோ 
உதிர்கின்றது 
பதில் என்ன கூறு 
பூவும் நானும் வேறு 
ஏதேதோ எண்ணம் 
வளர்த்தேன் 
உன் கையில் என்னைக் 
கொடுத்தேன் 
 குலதெய்வமே எந்தன் 
குறை தீர்க்கவா 
கை நீட்டினேன் 
என்னைக் கரை சேர்க்கவா 
நீயே அணைக்க வா 
தீயை அணைக்க வா 
நீ பார்க்கும் போது 
பனியாகிறேன் 
உன் மார்பில் சாய்ந்து 
குளிர் காய்கிறேன் 
எது வந்த போதும் 
இந்த அன்பு போதும் 
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 
உன் கையில் 
என்னைக் கொடுத்தேன் 
நீதானே புன்னகை மன்னன் 
உன் ராணி நானே 
பண்பாடும் பாடகன் நீயே 
உன் ராகம் நானே 
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் 
உன் கையில் 
என்னைக் கொடுத்தேன் 
Thanks for Joining - Prakash 31.