menu-iconlogo
logo

Kodiyile Malloigai Poo

logo
Letras
கொடியிலே

மல்லியப்பூ

மணக்குதே மானே

எடுக்கவா

தொடுக்கவா

துடிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லி தூண்டுதே

பவளமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே

நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே

மல்லியப்பூ

மணக்குதே மானே

கொடுக்கவா

தடுக்கவா

தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும்

அது நெனைச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும்

ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு

நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாதை ரெண்டு

வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்ல

சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல

இந்த துன்பம் யாரால

பறக்கும் திசையேது

இந்த பறவை அறியாது

உறவோ தெரியாது

அது உனக்கும் புரியாது

பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே

காத்திருப்பேன் பொன்மயிலே

தேரு வரும் உண்மையிலே

சேதி சொல்வேன் கண்ணாலே

கொடியிலே

மல்லியப்பூ

மணக்குதே மானே

கொடுக்கவா

தடுக்கவா

தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லி தூண்டுதே

பவளமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே

நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே

மல்லியப்பூ

மணக்குதே மானே

எடுக்கவா

தொடுக்கவா

துடிக்கிறேன் நானே

Kodiyile Malloigai Poo de P. Jayachandran/S. Janaki - Letras y Covers