menu-iconlogo
huatong
huatong
avatar

Indraikku En Indha Aanandhame

P Jayachandran/Vani Jairamhuatong
boneywasahuatong
Letras
Grabaciones
திரைப்படம்: வைதேகி காத்திருந்தாள்

இசை: இளையராஜா

பாடகர்கள்: P.ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்

ஆ: ஆ……….ஆ..ஆ..ஆ…..ஆ..ஆ..

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே

கனவுகளின் சுயம்வரமோ

கண் திறந்தால் சுகம் வருமோ..ஓ..

பெ: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே

ஆ: பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம்

பூமகள் காதினிலே

பெ: பூவினை தூவிய பாயினில் பெண் மனம்

பூத்திடும் வேளையிலே

ஆ: நாயகன் கை தொடவும்

வந்த நாணத்தைப் பெண் விடவும்

நாயகன் கை தொடவும்

வந்த நாணத்தைப் பெண் விடவும்

பெ: மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச..

ஆ: மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச..

பெ: சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே

கனவுகளின் சுயம்வரமோ

கண் திறந்தால் சுகம் வருமோ..ஓ..

ஆ: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..ஏ...

பெ: கரி மக ரிஸா

ரிகம கமதா

ஸத ரிஸ தம

கஸரி கமத மத மத ஸரி

ஸாஸ ஸாஸ ஸாஸ ஸாஸ

சரி கரி ரிச சத தம மக

ரீரி ரீரி ரீரி ரீரி

ரிக மக கரி ரிச சத தம

பெ: மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்

தேவியின் திருமணமோ

ஆ: ஆலிலையோ தொட ஆளில்லையோ

அதில் ஆடிடும் என் மனமோ

பெ: காதலின் பல்லவியோ அதில்

நான் அனுபல்லவியோ

காதலின் பல்லவியோ அதில்

நான் அனுபல்லவியோ

ஆ: மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்..

இன்பத்திலே நூறு வரம்..

பெ: மிதந்து மறந்து மகிழ்ந்த நெஞ்சத்தில்

ஆ: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே

பெ: கனவுகளின் சுயம்வரமோ..ஓ..

கண் திறந்தால் சுகம் வருமோ..ஓ..

ஆ: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே..ஏ...

Más De P Jayachandran/Vani Jairam

Ver todologo