ஆண் ( விசில் )
பெண். ம்... ம்...
ஆண் ( விசில் )
பெண் ம்... ம்...
ஆண் நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
பெண் நெய்யூறும் கானகத்தில்
கை காட்டும் மானே
ஆண் தாலாட்டும் வானகத்தில்
பாலூற்றும் வெண்ணிலவே
பெண் தெம்மாங்கு பூந்தமிழே
தென்னாடன் குல மகளே
ஆண் ( விசில் )
பெண் ம்... ம்...
ஆண் ( விசில் )
பெண் ம்... ம்...
இருவர் நீரோடும்
வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில்
பாலூற்றும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குல மகளே
பாடல் தலைப்பு நீரோடும் வைகையிலே
திரைப்படம் பார் மகளே பார்
கதாநாயகன் சிவாஜி கணேசன்
கதாநாயகி சௌகார் ஜானகி
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்
பாடகிகள் P.சுசீலா
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
ராமமூர்த்தி
பாடலாசிரியர்கள் கண்ணதாசன்
இயக்குநர் பீம் சிங்
வெளியானஆண்டு 1963
தயாரிப்பு ஏ. பீம்சிங்
உங்களுக்காக தமிழில் ஐசக்
பெண் மகளே உன்னைத் தேடி நின்றாளே
மங்கை இந்த மங்கல மங்கை
ஆண் வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே
தந்தை உன் மழலையின் தந்தை
நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
பெண் அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே
ஆண் நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
பெண் அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே
இருவர் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆண் விசில்... பெண். ம். ம்.
ம். ம்.ஓ. ஓ. ஓ. ஓ ( இணைந்து )
இருவர் நீரோடும்
வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில்
பாலூற்றும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குல மகளே
உங்களுக்காக தமிழில் ஐசக்
பெண் குயிலே என்று கூவி நின்றேனே
உன்னை என் குலக் கொடி உன்னை
ஆண் துணையே ஒன்று தூக்கி வந்தாயே
எங்கே உன் தோள்களில் இங்கே
பெண் உன் ஒரு முகமும் திரு மகளின்
உள்ளம் அல்லவா
ஆண் உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின்
வெள்ளம் அல்லவா
இருவர் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆண் விசில் பெண். ம்.ம்.ம்
ம். ஓ. ஓ. ஓ. ஓ ( இணைந்து )
இருவர் நீரோடும்
வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில்
பாலூற்றும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குல மகளே
பெண் ஆராரொ ஆரிரரோ ஆராரொ ஆரிரரோ
ஆராரொ ஆரிரரோ ஆராரொ ஆரிரரோ