ஆ; நினைத்தேன் வந்தா..ய் நூறு வயது....
கேட்டேன் தந்தா..ய் ஆசை மனது....
பெ: நினைத்தேன் வந்தா..ய் நூறு வயது ....
கேட்டேன் தந்தா..ய் ஆசை மனது....
ஆ:நூறு நிலாவை ஒரு நிலவாக்கி
பாவை என்றேன்
பெ:ஆயிரம் மலரை ஒரு மலராக்கி
பார்வை என்றேன்
ஆ: கண் மீனாக மானாக நின்றாடவோ..
பெ: சொல் தேனாக தாயாகப் பண்பாடவோ ..
ஆ: மா..லை..நே..ரம் வந்துறவாடவோ
பெ: மா..லை..நே..ரம் வந்துறவாடவோ
பெ: ஓஓ ..ஓ... ஹோ..ஓய்..யா
ஓஓ ..ஓ... ஹோ..ஓய்..யா
பெ: நினைத்தேன் வந்தா..ய் நூறு வயது
கேட்டேன் தந்தா..ய் ஆசை மனது..
ஆ: நிலைக்கண்ணாடி கண்ணம் கண்டு ஆஆ.. ஹா
மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஓ ஓ..ஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா..
அன்புத் தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா..
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா..
அன்புத் தேனோடை பாய்கின்..ற சொர்க்கம் வா
பெ:மன்னன் தோளோடு அள்ளிக்கொஞ்சும் கிள்ளை
அவள் தேரோடு பின்னிச்செல்லும் முல்..லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்..
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்..
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்..
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்..
பெ: நினைத்தேன் வந்தாய் நூறு வயது....
கேட்டேன் தந்தாய் ஆசை மனது....
ஆ : இடை நூலாடிச்செல்ல செல்ல ஆ ஆ..ஹா
பெ : அதை மேலாடை மூடிக்கொள்ள ஓ ஓ..ஹோ
ஆ: சின்னப்பூ மேனி காணாத கண் என்ன..
பெ: சொல்லித்தீராத இன்பங்கள் என்னென்ன
ஆ: சின்னப்பூ மேனி காணாத கண் என்ன
பெ: சொல்லித்தீராத இன்பங்..கள் என்னென்ன
இருவர் : ஓஓ ..ஓ... ஹோ..ஓய்..யா
ஓஓ ..ஓ... ஹோ..ஓய்..யா
இருவர்: நினைத்தேன் வந்தா..ய் நூறு வயது..
கேட்டேன் தந்தா..ய் ஆசை மனது..
நினைத்தேன் வந்தா..ய் நூறு வயது..
கேட்டேன் தந்தா..ய் ஆசை மனது..