பெண் : அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுத்தது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய்
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
ஆண் : அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கே உபயம்
எதற்கு ஆராய்ச்சி
பெண் : இந்த நாணயத்தில்
உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட
காணிக்கை இட மாட்டேன்
ஆண் : பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்
ஒற்றை நாணயம்
பெண் : துடிக்கும் கண்களில்
கண்மணி பார்த்தேன்
ஆண் : கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
பெண் : செவ்வந்தி பூவில்
நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
ஆண் : இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்
பெண் : ஒற்றை நாணயம்