இன்னிசை பாடிவரும் , இளம்
காற்றுக்கு உருவம் இல்லை ,
காற்றலை இல்லை என்றால் ,
ஒரு பாட்டொலி கேப்பதில்லை ,
ஒரு கானம் வருகையில் ,
உள்ளம் கொள்ளை போகுதே ,
ஆனால் காற்றின் முகவரி ,
கண்கள் அறிவதில்லையே ,
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் ,
அதை தேடி தேடி தேடும்
, மனதும் தொலைகிறதே ,
இன்னிசை பாடிவரும் , இளம்
காற்றுக்கு உருவம் இல்லை ,
காற்றலை இல்லை என்றால் ,
ஒரு பாட்டொலி கேப்பதில்லை ,
கண் இல்லை என்றாலோ ,
நிறம் பார்க்கமுடியாது ,
நிறம் பார்க்கும் உண் கண்ணை
, நீ பார்க்க முடியாது ,
குயில் இசை போதுமே , அட
குயில் முகம் தேவையா ?
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா ?
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
, கற்பனை தீர்ந்திவிடும் ,
கண்ணில் தோன்றா காட்சியில்தான்
, கற்பனை வளர்ந்திவிடும் ,
அந்த பாடல் போல தேடல் கூட , ஒரு சுகமே