Prakash 31 High Digital
ஆண் : இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
மாலை வந்தாலே மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்
பெண் : இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு..
Prakash 31
ஆண் : பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே….ஏ…
பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே
பால் மேனி சதிராடுதே…..ஏ…..
பெண் : கனியாய் கனிந்து
கனவில் மிதந்து
இளமை விருந்து இதழில் அருந்து
ஆண் : பார்வை பூவாலே
பட்டு மெத்தை போட்டாளே
பருவம் ராகம் பாடாதோ ஹோய்
பெண் : இது மானோடு மயிலாடும் காடு
ஆண் : புது தேனோடு மலராடும் வீடு...
Prakash 31
பெண் : உன் மூச்சு என் மேல் படுகின்றபோது..
உன் மூச்சு என் மேல்
படுகின்றபோது
என் மூச்சும் சூடாகுதே
ஆண் : கொதித்தால் என்னம்மா
குயிலே கண்ணம்மா
அணைத்தே அள்ளம்மா
அழகே செல்லம்மா
பெண் : மேகம் நீ தானே
மின்னல் கொடி நான் தானே
மடி மேல் வா வா மீன் போலே ஹோய்
ஆண் : இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
பெண் : மாலை வந்தாலே
மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்
ஆண் : இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
பெண் : இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு..
Presented by Prakash 31