படம் : மூன்று முடிச்சு ,
பாடியவர்கள் :ஜெயச்சந்திரன்,
வாணி ஜெயராம்
இசை :எம். எஸ். விஸ்வநாதன்
️ ️ ️ தனம் மூர்த்தி ️ ️ ️
ஆண் : வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்
பெண் :நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள்
️ ️ ️ தனம் மூர்த்தி ️ ️ ️
ஆண் : மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சனைகள்
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சனைகள்
பஞ்சனையில் பள்ளிக் கொண்டால்
மனம் இரண்டும் தலை அணைகள்
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்
பெண் : ஆ...ஆ... ஆஹா ஹா
ஆ...ஆ... ஆஹா ஹா
️ ️ ️ தனம் மூர்த்தி ️ ️ ️
பெண் :தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள்
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மண வினைகள்
ஆண் : வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்
️ ️ ️ தனம் மூர்த்தி ️ ️ ️