மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
இத்தனை காலம் சித்திரப்
பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது..
அதில் ஊடல் கூடியது...
லலலாலாலாலலலலல்லா
லலலாலலலாலா ..ஆ...ஆ..
மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்
மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்
விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது
தலைமுதல் கால்வரை சிலிர்த்திடத்தான்..
பூவை நானும் பூவல்ல பூப்போல நீ கிள்ள
எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது
மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
ஆஹாஹஹா ஏஹெஹே லாலலலலலலலலலலலா
ஆஹஹா ஓஹொஹோ லாலலலலலலலலலலலா
ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய
ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய
கொதித்தது குளிர்ந்தது ..
குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்..
காமன் பாடும் சங்கீதம்
காலத்தின் சந்தோஷம்..
தொடத் தொடத் தொடர்ந்தது
கொடியெனப் படர்ந்தது..
மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
இத்தனை காலம் சித்திரப்
பெண்ணை பார்வை தேடியது
ஆ...ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது
லலலாலாலாலலலலல்லா லலலாலலலாலலா
லலலாலாலாலலலலல்லா லலலாலலலாலலா
லலலாலாலாலலலலல்லா லலலாலலலாலலா