செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
கூகூ.. குக்குகூகூ
கூகூ என கூவும் குயில்
சின்ன சின்ன சந்தத்தில்
அந்தி போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
கூகூ என கூவும் குயில்
சின்ன சின்ன சந்தத்தில்
அந்தி போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
முத்தம் இடும் மாலை
வேளை
மூடு விழா நாடகமோ
நித்தம் இதழ் தேடும்
நேரம்
நாணம் எனும் நோய் வருமோ
பூமாலை சூடாது பாய் தேட கூடாது
எல்லை தனை தாண்டாது
பிள்ளை என தாலாட்டு
மஞ்சள் தரும் நாள் கூறு
வஞ்சம் இல்லை தாள் போடு
காமன் கணை ஏவல் எனை காவல் மீற தூண்டுதே
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
மங்கை இவள் தேகம்
நோகும்
மோகனமாய் தாளமிடு
கங்கை நதி பாயும்
நேரம்
காதில் ஒரு சேதி கொடு
நாள்தோறும் ராக்காலம்
ஏதிங்கே பூபாளம்
இன்ப கதை காணாது கண்கள் இமை மூடாது
உன்னை கரை சேர்க்காது எந்தன் அலை ஓயாது
சேவல் அது கூவும் வரை நாணம் ஓய்வு காணுமே
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
கூகூ என கூவும் குயில்
சின்ன சின்ன சந்தத்தில்
அந்தி போர் நடத்தும்
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது
செங்கமலம் சிரிக்குது
சங்கமத்தை நினைக்குது