சொந்தத்துற்குள் சூழ்ச்சி செஞ்சது யாரு சாமி?
இரத்தம் எல்லாம் நஞ்சா நெரம் மாறுதே!
சொந்தத்துற்குள் சூழ்ச்சி செஞ்சது யாரு சாமி?
இரத்தம் எல்லாம் நஞ்சா நெரம் மாறுதே!
நெஞ்சம் எல்லாம் பாரம் கண்களெல்லாம் ஈரம்
பாதகத்தால் பாசம் தடுமாறுதே!
தெய்வம் வந்து வாழ்ந்த வீட்ட
தீப்பிடிக்க வச்சது யாரு?
உறவுக்குள் கலவு போன உள்ளங்கள பாரு!
அன்பால கட்டி வச்ச
ஆகாச கோட்டையைத் தான்
இரெண்டாக துண்டு போட தூண்டிவிட்டது யாரு?
இந்த தேன் கூட்டத்தான் பாரு
இதில் தீய வச்சது யாரு?
வஞ்சகத்தால் நெஞ்சு உடைஞ்சு மனசு கதறுதே!
அந்தப் பாரதப் போர் போல
இந்த கதையில் சில பேர
ஆட வச்சு பாடம் நடத்த வாழ்க்கை நெனைக்குதே!
சொந்தத்துற்குள் சூழ்ச்சி செஞ்சது யாரு சாமி?
இரத்தம் எல்லாம் நஞ்சா நெரம் மாறுதே!
நெஞ்சம் எல்லாம் பாரம் கண்களெல்லாம் ஈரம்
பாதகத்தால் பாசம் தடுமாறுதே!
யார் வலிய யார் இங்கே
தாங்கிக் கொள்ள நேருமோ?
யுத்தம் வந்த போதிலும்
இரத்த சொந்தம் மாறுமோ?
பாசத்திற்கு பஞ்சம் வந்த அன்பு தடுமாறிடுமோ?
அண்ணண் தம்பி உறவுக்குதான் ஆயுள் இங்கே குறைந்திடுமோ?
தெய்வம் வந்து வாழ்ந்த வீட்ட
தீப்பிடிக்க வச்சது யாரு?
உறவுக்குள் கலவு போன உள்ளங்கள பாரு!
அன்பால கட்டி வச்ச
ஆகாச கோட்டையைத் தான்
இரெண்டாக துண்டு போட தூண்டிவிட்டது யாரு?
இந்த தேன் கூட்டத்தான் பாரு
இதில் தீய வச்சது யாரு?
வஞ்சகத்தால் நெஞ்சு உடைஞ்சு மனசு கதறுதே!
அந்தப் பாரதப் போர் போல
இந்த கதையில் சில பேர
ஆட வச்சு பாடம் நடத்த வாழ்க்கை நெனைக்குதே!
சொந்தத்துற்குள் சூழ்ச்சி செஞ்சது யாரு சாமி?
இரத்தம் எல்லாம் நஞ்சா நெரம் மாறுதே!
நெஞ்சம் எல்லாம் பாரம் கண்களெல்லாம் ஈரம்
பாதகத்தால் பாசம் தடுமாறுதே!