menu-iconlogo
logo

Vaigai Nathiyoram Ponmaalai Neram

logo
Letras
பெண்: எண்ணம் எனும் ஏட்டில்

நான் பாடும் பாட்டில்

நீ வாழ்கிறாய்

நித்தம் வரும் மூச்சில் …

ஆண்: ஐயையே கொஞ்சம் இருங்க

கொஞ்சம் இருங்க

என்னங்க பாடுறீங்க

அப்படி இல்ல

நான் பாடுறேன் பாருங்க ..

ம்ம் ஹும்..

வைகை நதியோரம்

பொன்மாலை நேரம்

காத்தாடுது

கள் வடியும் பூக்கள்

காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது..

இது அன்பின் வேதம்

அதை நாளும் ஓதும்

இது அன்பின் வேதம்

நாளும் ஓதும் காற்றே...

பெண்: வைகை நதியோரம்

பொன்மாலை நேரம்

காத்தாடுது

ஆண்: ஆமா

பெண்: கள் வடியும் பூக்கள்

காத்தோடு சேர்ந்தே

கூத்தாடுது

ஆண்: கரெக்ட்டு இது கரெக்ட்டு

ஆண்: மாலை மழை மேகம் தன்னை

மெதுவாய் அழைத்தேன்

துணை வர வேண்டுமென்று

தூது சொல்லத்தான்

பெண்: மூண்டு வரும் மோகம் தன்னை

மெதுவாய் மறைத்தேன்

நினைவுகள் பூத்தவண்ணம்

நானும் மெல்லத்தான்

ஆண்: ஓர் சோலை புஷ்பம் தான்

திரு கோயில் சிற்பம் தான்

ஓர் சோலை புஷ்பம் தான்

திரு கோயில் சிற்பம் தான்

இதன் ராகம் தாளம் பாவம்

அன்பை கூறும்...

பெண்: வைகை நதியோரம்

பொன்மாலை நேரம்

காத்தாடுது

பெண்: யாரின் மனம் யாருக்கென்று

இறைவன் வகுத்தான்

இரு மனம் சேர்வதிங்கு

தேவன் சொல்லித்தான்

ஆண்: பூஜைக்கிது ஏற்றதென்று

மலரை படைத்தான்

தலைவனும் மாலை என்று

சூடிக்கொள்ளத்தான்

பெண்: ஓர் நெஞ்சின் ராகம் தான்

விழி பாடும் நேரம்தான்

ஓர் நெஞ்சின் ராகம் தான்

விழி பாடும் நேரம்தான்

இது அன்பின் வேதம்

நாளும் ஓதும் காற்றே...

ஆண்: வைகை நதியோரம்

பொன்மாலை நேரம்

காத்தாடுது

பெண்: கள் வடியும் பூக்கள்

காத்தோடு சேர்ந்தே

கூத்தாடுது

ஆண்: இது அன்பின் வேதம்

பெண்: அதை நாளும் ஓதும்

ஆண்: இது அன்பின் வேதம்

அதை நாளும் ஓதும் காத்தே

பெண்: வைகை நதியோரம்

பொன்மாலை நேரம்

காத்தாடுது

ஆண்: கள் வடியும் பூக்கள்

காத்தோடு சேர்ந்தே

கூத்தாடுது