பச்சோலை கீத்துக்குள்ள...
பதுங்கி நிக்கிற பசுங்கிளிக்கு...
மறஞ்சு நிக்கிற பருவம் வந்திருச்சு...
மாமனுக்கு...
செய்யும் சீரு செலவு வந்திருச்சு...
குலவை.........
ஏய் தன்னானே தாமரைப்பூ...
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே...
மாமா தாவணி வாங்கிவாங்க...
ஊரெல்லாம் கூட்டிகிட்டு...
வந்திடுங்க மேளம் கொட்டி...
ஏய் தன்னானே தாமரைப்பூ...
புள்ள தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திடுச்சு...
புள்ள தாவணி வாங்கிவாறேன்...
கொட்டுற பனியில நானும் உனக்கு...
கொடையா மாறட்டுமா...
ஓன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல...
குளிரும் காயட்டுமா...
பெண்:உனக்கும் எனக்கும் மனசு இப்ப...
வக்கத் த்ரி ஆச்சு...
ஒளிவா மறவா பேசி சிரிக்க...
ஓட கடயாட்சி...
கையில அணைக்கிற போது...
நீ துள்ளி குதிக்கிற மானு...
பெண்:ஆத்துல குளிக்கிற போது...
நீ ஆள கடிக்கிற மீனு...
உன் இடுப்பு சேல நழுவ...
நான் எடுத்து எடுத்து தழுவ......
ஏய் தன்னானே தாமரைப்பூ...
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திடுச்சு...
புள்ள தாவணி வாங்கிவாறேன்...
தெனமும் என்ன தொரத்துதைய்யா...
உங்க பெருமூச்சி...
அத்தி பூத்த மாலை போல...
மாமா உன் பேச்சு...
கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி...
வெளக்கா ஏத்தட்டுமா...
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி...
வெசயம் சொல்லட்டுமா...
மாமன் தரனும் சீரு...
ரெண்டு மாங்கா தட்டுத் தோடு...
நீ சிரிக்கிற தங்கத்தேரு...
உன் தேவை என்ன கேளு...
பெண்:வெடல புள்ள நானும்...
ஒரு வெவரம் கேட்க வேணும்...
ஏய் தன்னானே தாமரைப்பூ...
புள்ள தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே...
மாமா தாவணி வாங்கிவாங்க...
ஊரெல்லாம் கூட்டிகிட்டு...
வருவேனே மேளம் கொட்டி...
ஏய் தன்னானே தாமரைப்பூ...
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திடுச்சு...
புள்ள தாவணி வாங்கிவாறேன்...