menu-iconlogo
logo

Saandhu Pottum

logo
avatar
Swarnalatha/Arunmozhilogo
👑🆂u200b🄷🅰u200b🄺🔥🆄🄼🅼🄰👑🎸KKK🎸logo
Canta en la App
Letras
💃💃Village Folk 💃💃

ஆண் : சாந்து பொட்டும்

சந்தன பொட்டும்

தல தளக்குற சரிகை பட்டும்

எம்மனசுல கொக்கி போடுது

நாகரத்தினமே

ஆண் குழு : அடி சாந்து பொட்டும்

சந்தன பொட்டும்

தல தளக்குற சரிகை பட்டும்

எம்மனசுல கொக்கி போடுது

நாகரத்தினமே

ஆண் : நடு சமத்துல

உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே

அந்த காரணத்த தெரிஞ்சு

சொல்லடி நாகரத்தினமே

ஆண் குழு : நடு சமத்துல

உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே

அந்த காரணத்த தெரிஞ்சு

சொல்லடி நாகரத்தினமே…

பெண் : வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு

வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு

வெடலப்புள்ள சமஞ்சிருக்கு

கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது

ஆச ராசாவே…

பெண் குழு : வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு

வெளஞ்ச நெத்து வெடிச்சிருக்கு

வெடலப்புள்ள சமஞ்சிருக்கு

கடலைப்பூவும் மலர்ந்து நிக்குது

ஆச ராசாவே…

பெண் : அட கனிஞ்ச பழத்த

குருவி கொத்துது ஆச ராசாவே

அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்

ஆச ராசாவே

பெண் குழு : அட கனிஞ்ச பழத்த

குருவி கொத்துது ஆச ராசாவே

அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்

ஆச ராசாவே

💕💕UPLOAD SAKTHIKUTTY 💕💕

ஆண் : பாதி ராத்திரி

பதறி எழுந்து பாய விரிச்சி

முழிச்சிருந்தேன்

ஆண் : அட பாதி ராத்திரி

பதறி எழுந்து பாய விரிச்சி

முழிச்சிருந்தேன்

முழிச்சிருந்தும் கனவு வந்ததும்

நாகரத்தினமே

ஆண் குழு : பாதி ராத்திரி

பதறி எழுந்து பாய விரிச்சி

முழிச்சிருந்தேன்

முழிச்சிருந்தும் கனவு வந்ததும்

நாகரத்தினமே

ஆண் : ஒரு மாதிரியா மனசு கெட்டது

நாகரத்தினமே

அந்த காரணத்த

தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே

பெண் : சோறு தண்ணி இறங்கலையே

வேலை செய்ய தோனலையே….

சோறு தண்ணி இறங்கலையே

வேலை செய்ய தோனலையே

என் நெனப்பும் எங்கிட்ட

இல்லையே ஆச ராசாவே

பெண் குழு : சோறு தண்ணி இறங்கலையே

வேலை செய்ய தோனலையே

என் நெனப்பும் எங்கிட்ட

இல்லையே ஆச ராசாவே

பெண் : ஒரு மாதிரியா

மயக்கம் வருது ஆச ராசாவே

அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்

ஆச ராசாவே

🍫KEEP SUPPORTING 💐 💐

ஆண் : ஏரு புடிச்சு உழுகையில்ல

ஏத்தம் கட்டி இறைக்கையிலே

அடி ஏரு புடிச்சு உழுகையில்ல

ஏத்தம் கட்டி இறைக்கையிலே

தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே

ஆண் குழு : ஏரு புடிச்சு உழுகையில்ல

ஏத்தம் கட்டி இறைக்கையிலே

தாறு மாறா புத்தி போகுது நாகரத்தினமே

ஆண் : ராத்திரி பகலு

தெரியலையே நாகரத்தினமே

அந்த காரணத்த தெரிஞ்சு

சொல்லடி நாகரத்தினமே

பெண் : கூடி சனங்க இருக்கையிலே

சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே

கூடி சனங்க இருக்கையிலே

சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே

ஆடி அடங்கி நான்

கிடக்கேன் ஆச ராசாவே

பெண் குழு : கூடி சனங்க இருக்கையிலே

சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே

ஆடி அடங்கி நான்

கிடக்கேன் ஆச ராசாவே

பெண் : அத ஊரு முழுக்க ஜாடை

பேசுது ஆச ராசாவே

அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும்

ஆச ராசாவே

🙏🙏🙏🙏நன்றி🙏🙏🙏🙏