menu-iconlogo
huatong
huatong
avatar

Chandrodhayam Oru Pennanadho

T.M. Soundararajanhuatong
rthomas682huatong
Letras
Grabaciones
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இருக்கண்ணானதோ

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இருக்கண்ணானதோ

பொன்னோவியம் இன்று பெண்ணானதோ

என் வாசல் வழியாக வளம் வந்ததோ

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இருக்கண்ணானதோ

குளிர் காற்று கில்லாத மலரல்லவோ

கிளிவந்து கொத்தாத கனியல்லவோ

குளிர் காற்று கில்லாத மலரல்லவோ

கிளிவந்து கொத்தாத கனியல்லவோ

நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ

எந்நாளும் பிரியாத உறவல்லவோ

இளம் சூரியன் உந்தன் வடிவானது

செவ்வானமே உந்தன் நிறமானதோ

பொன்மாளிகை உந்தன் மனமானதோ

என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

இளம் சூரியன் உந்தன் வடிவானது

செவ்வானம் உந்தன் நிறமானதோ

ஆஅஹ்ஹா .... (ஹம்மிங் )

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ

உள் நெஞ்சால் தொடுகின்ற நெருப்பல்லவோ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ

உள் நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ

சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ

சந்தோசம் வருகின்ற வழியல்லவோ

என்கோவில் குடிகொண்ட சிலையல்லவோ

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இருக்கண்ணானதோ

அலையோடு பிறவாத கடல் இல்லையே

நிழலோடு நடக்காத உடல் இல்லையே

துடிக்காத இமையோடு விழி இல்லையே

துணையோடு சேராத இனம் இல்லையே

என் மேனி உனதன்றி எனதில்லையே

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ

விழுகின்ற சுகம் வாங்க தடை போடவோ

மாடி மீது தலை வைத்து இளைப்பாறவோ

முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ

கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

இளம் சூரியன் உந்தன் வடிவானது

செவ்வானமே உந்தன் நிறமானதோ

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இருக்கண்ணானதோ

ஆஆஆஆ … .

Más De T.M. Soundararajan

Ver todologo