நல்வரவு
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய்மொழி பேசு..
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய்மொழி பேசு..
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
காதல் என்றாய்
கார்காலம் அழைக்கும்போது
ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா?
அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய
நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில்
காதலர் வாழ்க
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில்
காதலர் வாழ்க
பூமிக்கு மேலே வானுள்ள வரையில்
காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
காதல் என்றாய்..
ம்ம்.. நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லிச் சென்றாய்..