ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
அட முட்டா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும்
அச்சம் தீரலயே
உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ளக்காரி புடிப்பா
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய
எதுக்காகப் புடிச்ச
ஒரு வெள்ளக்காரி காசு தீந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா
ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள் தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே