menu-iconlogo
logo

Malligai Malligai

logo
Letras
இசையமைப்பாளர் திரு.மணிசர்மா

அவர்களுக்கு நன்றி

இந்த அழகிய பாடலை பாடி

நம்மை மகிழ்வித்த

திருமதி.சுஜாதா மோகன் அவர்களுக்கும்

திரு.விஜய் யேசுதாஸ் அவர்களுக்கும் நன்றி

ஆண்: மல்லிகை மல்லிகை பந்தலே

அடி மணக்கும் மல்லிகை பந்தலே

என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே

கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே

பெண்: முந்திரி முந்திரி தோப்புல

எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை

இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள

எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில

ஆண்: வெள்ளி கொலுசு போலவே

கால உரச வந்தேனே

பட்டு புடவ போலவே

தொட்டு தழுவ வந்தேனே

பெண்: உன்னை துளசி செடியாய்

சுற்றி வந்தேனே

கண்ணால் பார்த்து பார்த்து

வெற்றி கண்டேனே

ஆண்: மல்லிகை மல்லிகை பந்தலே

அடி மணக்கும் மல்லிகை பந்தலே

என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே

கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே

பெண்: செவியோடு தான்

காதல் சொல்வாய் என்பேனே

தயிர் சாதமாய்

உன்னை அள்ளி தின்பேனே

ஆண்: பெண்ணாசையே இல்லா மனிதன் நானடி

உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனடி

பெண்: பிழையான வார்த்தை போல

வாழ்ந்து வந்தேனே

உன்னை பார்த்த பின்னே

என்னை திருத்தி கொண்டேனே

ஆண்: புரியாத கவித போல வாழ்ந்து வந்தேனே

அவை யாவும் உந்தன் கண்ணில்

அர்த்தம் கண்டேனே

பெண்: இந்த அருகம்புல்லின் மேல்

பனி துளியாய் நின்றாயே

எந்தன் பருவ தோள்களில்

பச்சை கிளியாய் வாழ்ந்தாயே

ஆண்: என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே

கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே

ஆண்: அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே

பசி நேரத்தில் பார்த்த தண்ணீா் பந்தலே

பெண்: கலங்காத ஓர் தெப்பம் போல வாழ்ந்தேனே

நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே

ஆண்: சதை மூங்கில் போல

உந்தன் தேகம் பார்த்தேனே

அதை ஊதி மெல்ல நானும்

அணைந்து போனேனே

பெண்: மழை தூறும் சாலை ஓரம்

உன்னை கண்டேனே

குடைக்குள்ளயே ஓடி வந்தாய்

குடை சாய்ந்தேனே

ஆண்: உந்தன் விழியை கண்டேனே

எந்தன் கனவை கண்டேனே

உந்தன் உதட்டை கண்டேனே

எந்தன் உணவை கண்டேனே

பெண்:உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே

கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டேனே

ஆண்: மல்லிகை மல்லிகை பந்தலே

அடி மணக்கும் மல்லிகை பந்தலே

என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே

கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே

பெண்: முந்திரி முந்திரி தோப்புல

எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை

இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள

எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில