Romeo Juliet (2015) (ரோமியோ ஜூலியட்)
D. Imman
Vaikom Vijayalakshmi
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே உன் வாழ்க்கை போகுதோ
எங்கே உன் தூக்கம் போனதோ
நூல் பொம்மை ஒன்றாய்
நீ ஆடுகின்றாய்
ராஜகுமாரி.. ரத்தின குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே நீ கேட்ட ராஜ்ஜியம்
அய்யோ நீ இங்கே பூஜ்ஜியம்
ஒர் தங்க கூண்டில் நீ மாட்டி.க் கொண்டாய்
ராஜகுமாரி ரத்தின குமாரி
உன் கூந்தல் மாறி
உன் ஆடை மாறி
நீ நடக்கும் தோரணைகள் மாறி
உற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சும் மாறி
நீ சூடும் மூரல் வேறாக மாறி
மாறி மாறி யாவும் மாறி
ராஜா குமாரி ஏ ரத்தின குமரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
பழைய நிலைக்கு திரும்பவே
சிறிய இதயம் விரும்புதே
வழிகள் அதற்க்கு எங்கே
குழப்பம் எதற்கு இங்கே
உடைந்து முடிந்த உறவுகள்
விடிந்த மனதில் அரும்புதே
பொருளும் இதற்க்கு எங்கே
குழப்பம் எதற்கு இங்கே
காசுக்குத் தானே
நீ ஆசைப்பட்டு போனாய்
பாசத்துக்கு ஏங்கும்
ஓர் பூனையாக ஆனாய்
புழுதி சிரிப்போ இங்கே
பளிங்கு சிறையோ அங்கே
ராஜகுமாரி ரத்தினகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி
எங்கே நீ கேட்ட வானியல்
எங்கே நீ சொன்ன வேதியல்
யார் போல உன்னை நீ மாற்றுகின்றாய்
ராஜகுமாரி ஏ ரத்தினகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி