menu-iconlogo
huatong
huatong
avatar

Koodamela Koodavechi

V.V. Prassanna/Vandana Srinivasanhuatong
autenduwshuatong
Letras
Grabaciones
கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே

உன் கூட கொஞ்சம் நானும் வாறன்

கூட்டிகிட்டு போனா என்ன

ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா

உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா

நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா

நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவள

நீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா

என்ன சொல்லும் ஊரு என்ன

ஒத்துமையா நாமும் போக இது நேரமா

தூபதாலே தேச்சு வச்ச கரு ஈரமா

நான் போறேன்னு சொல்லாம வாரேன்னே உன் தாரமா

நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா

சரணம் 1

சாதத்துல கல்லு போல

நெஞ்சுக்குள்ள நீ இருந்து

செரிக்காமல் சதி பண்ணுற

சீயக்காய போல கண்ணில்

சிக்கிகிட்ட போதும் கூட

உறுத்தாம உயிர் கொல்லுற

அதிகம் பேசாமல் அளந்து நான் பேசி

எதுக்கு சட பின்னுர

சல்லி வேற ஆணி வேராக்குற

சட்ட பூவா வாசமா மாத்துற

நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுறேன்

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே

நீ கூட்டிகிட்டு போக சொன்னா

என்ன சொல்லும் ஊரு என்ன

சரணம் 2

எங்க வேணா போயிக்கோ நீ

என்ன விட்டு போயிடாம

இருந்தாலே அது போதுமே

தண்ணியத் தான் விட்டுப் புட்டு

தாமரையும் போனதுன்னா

தர மேல தல சாயுமே

மறஞ்சு போனாலும் மறந்து போகாத

நெனப்பு தான் சொந்தமே

பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே

உன்ன பாக்க பாக்க தான் இன்பமே

நீ பாக்காம போனாலே கெடையாது மறு சென்மமே

கூட மேல கூட வச்சு கூடலூரு

ஹே கூடலூரு போறவளே

ம்ம் கூட்டிகிட்டு போகச் சொன்னா

என்ன சொல்லும் ஊரு என்ன

ஓ ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா

உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா

நான் போறேன்னு சொல்லாம வார்னே உன் தாரமா

நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா

ஆஹாஹா ஆஹாஹ ஆஹாஹ ஆஹாஹ ஹா ....

Más De V.V. Prassanna/Vandana Srinivasan

Ver todologo