(M) துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
(F) அதை சொல்லி சொல்லி
திரிவதனால் சுகம் வருமா
(M) துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
(F) அதை சொல்லி சொல்லி
திரிவதனால் சுகம் வருமா
(F) மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால்
மாங்காய் விழுந்திடுமா
M தனிமையிலே,தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
(F) மலரிருந்தால் மனம்
இருக்கும் தனிமை இல்லை
செங் கனியிருந்தால் சுவை
இருக்கும் தனிமை இல்லை
மலரிருந்தால் மனம்
இருக்கும் தனிமை இல்லை
செங் கனியிருந்தால் சுவை
இருக்கும் தனிமை இல்லை
(M) கடல் இருந்தால் அலை
இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை
இருக்கும் தனிமை இல்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
தனிமையிலே..தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
(F) பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
இந்த அவனியெல்லாம்
போற்றும் ஆண்டவன் ஆயினும்
தனிமையிலே..தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
Both: தனிமையிலே இனிமை காண முடியுமா