குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி
அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டற ஓட்டற சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே
சுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா
தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி
கண்ணாடிய காணோடி இந்தர்ரா பேராண்டி
குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு
பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தான் சுத்தி வந்தா சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம் தானே காடா மாறுச்சு
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு
கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே
குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு