எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றான்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றான்
நாளைக்கு நான் காண வருவானோ
பாலைக்கு நீர் ஊற்றி போவானோ
வழியோரம் விழி வைக்கிறேன்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவானோ
இல்லை ஏமாற்றம் தருவானோ
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவானோ?
வருவேனே..
நெஞ்சில் பூ மஞ்சம் தருவானோ ?
தருவேனே ..
தங்க தேராட்டம் வருவானோ?
வருவேனே..
இல்லை ஏமாற்றம் தருவானோ ?