நவம்பா் மாத மழையில்
நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில்
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யாா் என்றால்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ
மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தா் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான்
பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும்
எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காதென்றாய்
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா