அத்தமக உன்னை நெனைச்சு...
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்...
அத்தமக உன்னை நெனைச்சு...
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்...
அத்தனையும் மறந்துபுட்டேன்...
அடியே உன்னை பாத்ததுமே...
அத்தனையும் மறந்துபுட்டேன்...
அடியே உன்னை பாத்ததுமே...
அடி அஞ்சுகமே...
உன்னை கொஞ்சனுமே...
நான் மெல்ல...
சேதி சொல்ல...
ஒரு வார்த்தை ஒன்னும் வரவில்லை...
ஆண்:அத்தமக உன்னை நெனைச்சு...
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்...
அத்தனையும் மறந்துபுட்டேன்...
அடியே உன்னை பாத்ததுமே...
குயிலு கத்தும் தோப்புக்குள்ள
குறு குறுன்னு பாக்கயில...
மனசுக்குள்ள குடிசை ஒன்னு
மடமடனு சறியிதைய்யா...
வெயிலு வரும் நேரத்தில
மொட்டமாடி வடகம் போல...
நீயும் இல்லா நேரத்தில...
நெனைப்பு மட்டும் காயிதைய்யா...
கண்ணால வலை விரிச்சு...
தன்னால பொழம்பவச்ச...
ஒன்னோட மனசுக்குள்ள...
பொல்லாத காதல வச்ச...
மாமாங்கம் ஆனா கூட...
மாமா நான் காத்திருப்பேன்...
தனனா பாடி...
தாவணிய போட்டிருப்பேன்...
பூத்திருப்பேன்...
மாமன் மகன் உன்னை நெனைச்சு
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்
அத்தான் உன்னை பாத்த நிமிஷம்
அத்தனையும் மலர்ந்திருச்சே...
தயிரு பானை உறியாட்டம்...
தலைகீழ தொங்குறன்டி...
தாலி ஒன்னு வாங்கி வச்சு...
தை மாசம் தேடுறன்டி...
கயித்து கட்டில் காத்திருக்கு
காவலுக்கும் நான் இருக்கு...
நீயும் நானும் சேர்ந்திருக்க...
எந்த ராவு தவமிருக்கு...
அன்னாடம் காட்சியபோல்...
ஓன் நெனைப்ப செலவழிச்சேன்...
மழையில நான் நனைஞ்சு...
பூமிக்கு கொடை புடுச்சேன்...
வெள்ளாவி துணியாட்டம்...
வெள்ளதான் ஏன் மனசு...
அடியே புரிஞ்சு...
என்னைய நீ உடுத்து...
நாள் குறுச்சு...
மாமன் மகன் உன்னை நெனைச்சு...
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்...
மாமன் மகன் உன்னை நெனைச்சு...
மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்...
அத்தான் உன்னை பாத்த நிமிஷம்...
அத்தனையும் மலர்ந்திருச்சே...
அத்தான் உன்னை பாத்த நிமிஷம்...
அத்தனையும் மலர்ந்திருச்சே...
மச்சானே...
ஆசை வச்சேனே...
நான் மெல்ல...
சேதி சொல்ல...
ஒரு வார்த்தை ஒன்னும் வரவில்லை...
அத்தமக உன்னை நெனைச்சு...
அழகு கவிதை ஒன்னு வடுச்சேன்...
அத்தனையும் மறந்துபுட்டேன்...
அடியே உன்னை பாத்ததுமே......