நல்வரவு
ஆ... அ.. ஆ... அ..
ஆ.. ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ...
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
யாராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
வான் பறந்த தேன் சிட்டு
நான் புடிக்க வாரதா
கல்லிருக்கும் ரோசப்பூ
கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா
உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா
தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே
முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம்
நெஞ்சொடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும்
வா..னம் நான்
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா