menu-iconlogo
logo

Ada Veettukku Veettukku

logo
Paroles
தாங்குடுதத்த தரிகிடதத்த

தலாங்குதத்த

தகதிமி தகஜுனு

தாங்குடுதத்த தரிகிடதத்த

தலாங்குதத்த தகதிமி தகஜுனு

தாங்குத தரிகிடதத்த தத் தரிகிட

தத் தரிகிட தகதிமி தகஜுனு தா

தாங்குத தரிகிடதத்த தத் தரிகிட

தத் தரிகிட தகதிமி தகஜுனு தா

அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்

தெரு கூத்துக்கும்

பாட்டுக்கும் தாளகதி வேணும்

தல வாசல் இல்லா வீடும்

ஒரு தாளம் இல்லா கூத்தும்

தத்தித் தரிகிட தரிகிட ததிங்கினதோம்

அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்

தெரு கூத்துக்கும்

பாட்டுக்கும் தாளகதி வேணும்

அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டும்

அதில் முத்தை எடுப்பவன் கஷ்டம்

இந்த ஊருக்கு தெரியாது

உள் மனசுல ஆயிரம் பாரம்

அது பாட்டுல ஓடிடும் தூரம்

இது யாருக்கும் புரியாது

ஒன்னு இல்லாம ரெண்டும் இல்லே

ஆணில்லாம பெண்ணும் இல்லே

பெண் இல்லாம யாரும் இல்லே

துன்பம் இல்லா பேரும் இல்லே

வாசல் இல்லா வீடும் ஒரு

தாளம் இல்லா கூத்தும்

தத்தித் தரிகிட தரிகிட ததிங்கினதோம்

அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்

தெரு கூத்துக்கும்

பாட்டுக்கும் தாளகதி வேணும்

அட வீட்டுக்கு வீட்டுக்கு

வாசப்படி வேணும் ஹா ஹா

தெரு கூத்துக்கும்

பாட்டுக்கும் தாளகதி வேணும்

புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு

ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு

என்றும் வாழணும் பல்லாண்டு

ஒரு மல்லிக மெத்தையை போட்டு

அந்த மன்மதன் வித்தையை காட்டு

நான் கேட்கணும் தாலாட்டு

ஆடை இல்லா உடலும் இல்லே

அலையில்லாத கடலும் இல்லே

ஓசை இல்லா மணியும் இல்லே

ஆசை இல்லா மனசும் இல்லே

வாசல் இல்லா வீடும் ஒரு

தாளம் இல்லா கூத்தும்

தத்தித் தரிகிட தரிகிட ததிங்கினதோம்

அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்

தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்

தாளகதி வேணும் ஹா ஹா

தல வாசல் இல்லா வீடும்

ஒரு தாளம் இல்லா கூத்தும்

தத்தித் தரிகிட தரிகிட ததிங்கினதோம்

அட வீட்டுக்கு வீட்டுக்கு

வாசப்படி வேணும் ஹா ஹா

தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்

தாளகதி வேணும் ஊ ஊ ஊ