menu-iconlogo
logo

Velakku vacha nerathile

logo
Paroles
வெளக்கு வெச்ச நேரத்திலே

மாமன் வந்தான்

வெளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான்

மறைஞ்சி நின்னு பார்க்கையிலே

தாகம் என்றான்

நான் குடுக்க அவன் குடிக்க

அந்த நேரம் தேகம் சூடு ஏற

ஆ: வெளக்கு வெச்ச நேரத்திலே தந்தானன்னா

மறைஞ்சி நின்னு பார்க்கையிலே தர னானன்னா

ஆ: உச்சி வெயில் சாயும் நேரம்

ஒதட்டோரம் ஈரம் ஏறும்

பெ: பச்ச புல்லும் பாயாய் மாறும்

பசியேக்கம் தானா தீரும்

ஆ: ஓர விழி பார்க்கும்

பார்வை போதை ஏறுது

பெ: நூறு முறை சேர்ந்த

போதும் ஆசை கூடுது

ஆ: பொழுதாச்சு விளையாட

ஒரு வாட காத்து சூடு ஏத்தும்

பெ: வெளக்கு வெச்ச

நேரத்திலே மாமன் வந்தான்

மறைஞ்சி நின்னு

பார்க்கையிலே தாகம் என்றான்

ஆ: நித்தம் புது ராகம் கண்டு

நான் பாடும் பாடல் நூறு

பெ: நீ படிச்ச வேகம் கண்டு

நெல மாறும் தேகம் பாரு

ஆ: நீல மயில் தோகை சூடி ஜாக தேடுது

பெ: ஜாதி மலர் தேனில் ஊற ஜாடை கூறுது

ஆ: பொழுதாச்சு விளையாட

ஒரு வாட காத்து சூடு ஏத்தும்

வெளக்கு வெச்ச நேரத்திலே தந்தானன்னா

மறைஞ்சி நின்னு பார்க்கையிலே தர னானன்னா

பெ: நான் குடுக்க அவன் குடிக்க

அந்த நேரம் தேகம் சூடு ஏற

வெளக்கு வெச்ச நேரத்திலே மாமன் வந்தான்

மறைஞ்சி நின்னு

பார்க்கையிலே தாகம் என்றான்