menu-iconlogo
logo

Kanna Unnai Thedugiren Vaa

logo
Paroles

"கண்ணா.. கண்ணா.. கண்ணா..

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

கண்ணீர் இன்னும் ஓயவில்லை

கன்னங்களும் காயவில்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

ஏன் இந்த காதல் என்னும்

எண்ணம் தடை போடுமா

என் பாடல் கேட்ட பின்னும்

இன்னும் பிடிவாதமா

என்ன நான் சொல்வது

இன்று வந்த சோதனை

மௌனமே கொல்வதால்

தாங்கவில்லை வேதனை

உன்னைத் தேடி வந்தேன்

உண்மை சொல்ல வேண்டும்

இந்த சோகம் கொள்ள என்ன காரணம்

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை

உள்ளே ஒரு வேட்கை

காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணில் இனி சோகமில்லை

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

சோகத்தின் பாஷை என்ன

சொன்னால் அது தீருமா

கங்கை நீர் காயக்கூடும்

கண்ணீர் அது காயுமா

சோதனை நேரலாம்

பாசம் என்ன போகுமா

மேகங்கள் போய்விடும்

வானம் என்ன போகுமா

ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே

தோகை வந்த பின்னே சோகமில்லையே

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

காதல் குயில் பாடுகிறேன் வா

உன்னோடுதான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை

காதல் என்றும் தீர்வதில்லை

கண்ணில் இனி சோகமில்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா

கண்ணீர் குயில் பாடுகிறேன் வா"

Kanna Unnai Thedugiren Vaa par Ilaiyaraja/Sivakumar/Nathiya - Paroles et Couvertures