menu-iconlogo
logo

Poongaatre Ini Podhum HQ ~ padicha pulla

logo
Paroles
பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே

இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே

நான் ஒன்று எண்ணித் தவிக்க

தானொன்று தெய்வம் நினைக்க

துன்பத்தில் என்னை தள்ளிப் பார்க்காதே

என் நெஞ்சம் தாங்காதே

பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே

இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே

நம் கானம் கேட்ட வான் ஆடும் சோலை

வீணில் வாடுது பார்த்தாயோ

பொன் மாலை வேலை

இங்கென்ன தேவை

சோக சங்கீதம் கேட்டாயோ

என் வாழ்வு மண் மீது போனாலும்

உன் வாழ்வு இன்பங்கள் காணட்டும்

யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும்

வேர் போல ஆல் போல நீ வாழ்க

அன்பே அன்பே என் இன்பம் எங்கே

பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே

இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே

காவேரி இங்கு ஓடோடி வந்து

காதல் சங்கமம் ஆகாதோ

பூவோடு தென்றல் தாலாட்டுச்சொல்ல

ஆசை தோன்றுது ஏதேதோ

பூந்தென்றல் தீயாக வீசாதே

என் ஜீவன் தானாக வாழாதே

நான் என்றும் நீ என்றும் வேறானோம்

நிலையாக ஓடாத தேரானோம்

அன்பே அன்பே என் இன்பம் எங்கே

பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே

இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே

நான் ஒன்று எண்ணித் தவிக்க

தானொன்று தெய்வம் நினைக்க

துன்பத்தில் என்னை தள்ளிப்

பார்க்காதே என் நெஞ்சம் தாங்காதே

பூங்காற்றே இனி போதும் என் உடல் தீண்டாதே

இங்கு போராடும் சருகான பூ மனம் தாங்காதே