menu-iconlogo
logo

Aadi Velli Thedi Moondru Mudichu

logo
Paroles
ஆண்: ஆடி வெள்ளி தேடி உன்னை

நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன்

காவிரியின் ஓரம்…

காவிரியின் ஓரம்

ஆடி வெள்ளி தேடி உன்னை

நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன்

காவிரியின் ஓரம்

பெண்: ஓரக் கண்ணில் ஊறவைத்த

தேன் கவிதைச் சாரம்

ஓரக் கண்ணில் ஊறவைத்த

தேன் கவிதைச் சாரம்

ஓசையின்றிப் பேசுவது

ஆசை என்னும் வேதம்..

ஆசை என்னும் வேதம்

இந்த பாடலையும் வரிகளையும்

ஆசை என்னும் வேதம் (chorus)

ஆண்: வேதம் சொல்லி மேளமிட்டு

மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று

வித்தைபல நாடும்

வேதம் சொல்லி மேளமிட்டு

மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று

வித்தைபல நாடும்

பெண்: நாடும் உள்ளம் கூடும் எண்ணம்

பேசும் மொழி மெளனம்

ராகம் தன்னை மூடி வைத்த

வீணை அவள் சின்னம்

வீணை அவள் சின்னம்

(chorus)

வீணை அவள் சின்னம்

ஆண்: சின்னம் மிக்க அன்னக்கிளி

வண்ணச் சிலைக் கோலம்

என்னை அவள் பின்னிக் கொள்ள

என்று வரும் காலம்!

பெண்: காலம் இது காலம் என்று

காதல் தெய்வம் பாடும்

கங்கை நதி பொங்கும் கடல்

சங்கமத்தில் கூடும்

சங்கமத்தில் கூடும்

ஆண்: ஆடி வெள்ளி தேடி (பெண்: ஆ ஆ..... )

உன்னை

நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன்

காவிரியின் ஓரம்…

காவிரியின் ஓரம்