உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
என் உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த
முத்தாலம்மன் சாட்சி
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி
ஒருவாட்டி என உரசாட்டி
உன்ன உறுத்தும் பஞ்சணை
மெத்தையும் ராத்திரி பூத்திரி
ஏத்துற வேளையில
கருவாட்டு பான கெடச்சாக்க பூன
விடுமா சொல்லடி சுந்தரி
நெத்திலி வத்தலு வீசுற வாடையில
பூவாட்டம் உட்காந்து
மாவாட்டும் நேரம்தான்
உன் கைய நீட்டாத
முந்தானை ஓரம்தான்
பூவாடை தூக்காதா பூபாளம் தாக்காதா
நீ முத்தி போன கத்திரியா
புத்தம்புது பிஞ்சி
நான் முந்தாநாளு ஆளானதா
என்னுது உன் நெஞ்சு
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சுல
பச்சைய குத்தி வச்சேன்
இதுதான்டி ரதம்
இதுலதான் நெதம்
உன்னதான் உட்கார வச்சி நான்
ராசாத்தி ராசா நான்
ஊர்கோலம் வந்திடுவேன்
உன்னோடு நான் சேர
தின்னேனே மண் சோறு
நேந்துதான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு
ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு
நாத்தாடும் நான் காத்தாட்டமா
நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும்
நீ மாலை இடும் வேலை எது
கேட்குது என் தோளு
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே பகல் இரவா
உனக்கு மாலையிட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்