menu-iconlogo
logo

Raja Raja Cholan Naan

logo
Paroles
ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து

பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே

கை மீட்டும் போது பாயும் மின்சாரமே

உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்

இன்பங்கள் பாடம்கள் சொல்லும் என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்

அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்

உன் ராக மொகனம் என் காதல் வாகனம்

செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே

துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுமே

பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுமே

முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே

என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே

தேனோடை ஒரமே நீராடும் நேரமே

புல்லாங்குழல் தள்ளாடுமே

பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

மண் மீது சொர்க்கம் வந்து

பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

Raja Raja Cholan Naan par K. J. Yesudas - Paroles et Couvertures