நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
எழில் மேவும் கண்கள்
என்மேல் வலை வீசுதே
எழில் மேவும் கண்கள்
என்மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே
புதுப் பாதை தனை காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
புதுப் பாதை தனை காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
மது உண்ண மகிழ்வோடு
வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே
உன் இதழ் மூடுமா
மது உண்ண மகிழ்வோடு
வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே
உன் இதழ் மூடுமா
இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் விளையாடுதே