menu-iconlogo
logo

Mariyamma Mariyamma

logo
Paroles
மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

தலை மேல மணி மகுடம்

என் தாயி தந்த பூங் கரகம்

நிலையாக நிலைக்க வைக்கும்

நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி

உண்மை ஜெயிக்கும்படி

வேண்டும் வரம் தா மாரியம்மா

காவல் நீதான் காளியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா

காத்தும் கனலும் நீயம்மா

வானத்தபோல் நின்னு பாரம்மா

வந்தேன் தேடி நானம்மா

இந்த மனம் முழுதும் நீதானே

வந்த வழி துணையும் நீதானே

தங்க திருவடிய தொழுதோமே

இங்கு மனம் உருக அழுதோமே

சீரேஸ்வரி காமேஸ்வரி

வேறாரு நீதானே காப்பு

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

கரு மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

வானெல்லாம்வாழ்த்துத்தான் கேட்கட்டும்

வாழ்வே வளமே பாக்கட்டும்

நீ எங்க தாய் என்று காணட்டும்

நிழலும் நிஜமா மாறட்டும்

சக்தி முழுதும் தந்து காப்பாயே

முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே

பக்தி மனம் விரும்பும் என் தாயே

நித்தம் பரிதவிக்கும் உன் சேயே

சாட்சி சொல்லும் தாயே துணை

தீயெல்லாம் பூவாக மாறட்டும்

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

கரு மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

தலை மேல மணி மகுடம்

என் தாயி தந்த பூங் கரகம்

நிலையாக நிலைக்க வைக்கும்

நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி

உண்மை ஜெயிக்கும்படி

வேண்டும் வரம் தா மாரியம்மா

காவல் நீதான் காளியம்மா

ஆண் மற்றும் பெண்: மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

Mariyamma Mariyamma par Malaysia Vasudevan/K. S. Chithra - Paroles et Couvertures