menu-iconlogo
logo

Va Va Va Kanna Va

logo
Paroles
பெண் : வா வா வா வா..

கண்ணா வா...

பாடல் : வா வா வா கண்ணா வா

இசை : இளையராஜா

பெண் : வா வா வா வா

கண்ணா வா

தா தா தா தா கவிதை தா

உனக்கொரு சிறு

கதை நான் இனிமையில்

தொட தொட தொடர்கதை

தான் தனிமையில்

பெண் : உனக்கொரு சிறுகதை நா..ன்

தொடத் தொட தொடர்கதை தா..ன்

உருகி உருகி இதை படித்திட

வா வா வா வா கண்ணா வா

வா வா வா...

ஆண் : வானில் காணும் வானவில்லின்

வண்ணம் ஏழு வண்ணமோ

தோகை உந்தன் தேகம் சூட

மேகமாலை பின்னுமோ

பெண் : காணும் இந்த பூக்கள் மேலே

காயம்.என்ன காயமோ

காற்சலங்கையோடு வண்டு

பாடிச் சென்ற மாயமோ

ஆண் : நூறு நூறு தீபமாய்

வானில் அங்கு கார்த்திகை

வாழும் காதல் சின்னமாய்

ஆகும் எங்கள் யாத்திரை

பெண் : நாளு கண்கள் பாதை போட

நாகரீகம் தொடர்ந்தது

பெண் : வா வா வா வா

கண்ணா வா

தா தா தா தா கவிதை தா

ஆண் : எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்

தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்

எனக்கொரு சிறுகதை நீ...

தொடத் தொட தொடர்கதை நீ..

உருகி உருகி உனைப் படித்திட

வா வா வா வா அன்பே வா

வா வா வா...

பெண் : ஆசையோடு பேச வேண்டும்

ஆயுள் இங்கு கொஞ்சமே

ஆவலாக வந்த பின்னும்

தஞ்சம் இந்த நெஞ்சமே

ஆண் : ஆசை கொண்ட தேகம் ரெண்டு

நீதிமன்றம் போகுமே

பேசத் தேவை இல்லை என்றே

அங்கு தீர்ப்பு ஆகுமே

பெண் : ராக வீணை போலவே

நானும் வந்து போகவோ

தேகம் வீணை ஆகவே

தேவ கீதம் பாடவோ

ஆண் : நானும் நீயும் காதல் கைதி

எண்ண.எண்ண இனிக்குது

ஆண் : வா வா வா வா அன்பே வா

தா தா தா அமுதம் தா

குழு : ஆஹா

ஆண் : காளிதாசன் காண வேண்டும்

காவியங்கள் சொல்லுவான்

கம்ப நாடன் உன்னை கண்டு

சீதை என்று துள்ளுவான்

பெண் : ஷாஜகானை பார்த்ததில்லை

நானும் உன்னை பார்க்கிறேன்

தாகம் கொண்ட தேகம் ஒன்று

பாடும் பாடல் கேட்கிறேன்

ஆண் : தாஜ்மஹாலின் காதிலே

ராம காதை கூறலாம்

மாறும் இந்த பூமியில்

மதங்கள் ஒன்று சேரலாம்

பெண் : பாதி நீயும் பாதி நானும்

ஜோதியாக இணைந்திட

பெண் : வா வா வா வா கண்ணா வா

தா தா தா தா கவிதை தா

ஆண் : எனக்கொரு சிறுகதை நீ

பெண் : இனிமையில்

ஆண் : தொடத் தொட தொடர்கதை நீ

பெண் : தனிமையில்

ஆண் : எனக்கொரு சிறுகதை நீ

பெண் : ஆஆ …

ஆண் : தொடத் தொட தொடர்கதை நீ

பெண் : ஆஆ …

ஆண் : உருகி உருகி உனைப் படித்திட

வா வா வா வா அன்பே வா

ஆ பெ : வா வா வா ….

பாடல் பதிவேற்றம் பிடித்திருந்தால்